• Nov 26 2024

புத்தளத்தில் கரைவலை மீன்பிடி தொழில் ஆரம்பம்

Chithra / Oct 8th 2024, 3:16 pm
image

 

வாடைக்காற்று ஆரம்பமானதை முன்னிட்டு, புத்தளத்தில் தற்போது கரைவலையை பாவித்து மீன்பிடித் தொழில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முந்தல் - உடப்பு, சின்னப்பாடு, பள்ளிவாசல்பாடு, தொடுவா மற்றும் கற்பிட்டி ஆகிய கரையோர மீன்பிடிக் கிராமங்களில் மீன்வர்கள் இவ்வாறு கரைவலை மீன்பிடித் தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

அதிகாலை வேளையில் மீனவர்கள் தமது வள்ளத்தில் கரைவலைகளை ஏற்றி வளை வளைப்பதுடன், கூடுதலான மீன்களைப் பிடித்து வருகின்றனர். 

நெத்தலிமீன், சாலை மீன், காரல் மீன், சூடை மீன் என பல வகையான மீன்கள் தற்போது பிடிக்கப்படுவதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.

பகடந்த காலங்கிளல் மீன்பிடித் தொழில் இன்றி, தாம் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வந்ததாகவும் மீனவர்கள் கூறினர்.


புத்தளத்தில் கரைவலை மீன்பிடி தொழில் ஆரம்பம்  வாடைக்காற்று ஆரம்பமானதை முன்னிட்டு, புத்தளத்தில் தற்போது கரைவலையை பாவித்து மீன்பிடித் தொழில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.முந்தல் - உடப்பு, சின்னப்பாடு, பள்ளிவாசல்பாடு, தொடுவா மற்றும் கற்பிட்டி ஆகிய கரையோர மீன்பிடிக் கிராமங்களில் மீன்வர்கள் இவ்வாறு கரைவலை மீன்பிடித் தொழிலை ஆரம்பித்துள்ளனர்.அதிகாலை வேளையில் மீனவர்கள் தமது வள்ளத்தில் கரைவலைகளை ஏற்றி வளை வளைப்பதுடன், கூடுதலான மீன்களைப் பிடித்து வருகின்றனர். நெத்தலிமீன், சாலை மீன், காரல் மீன், சூடை மீன் என பல வகையான மீன்கள் தற்போது பிடிக்கப்படுவதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.பகடந்த காலங்கிளல் மீன்பிடித் தொழில் இன்றி, தாம் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வந்ததாகவும் மீனவர்கள் கூறினர்.

Advertisement

Advertisement

Advertisement