• Nov 08 2024

தம்பலகாமம் விவசாய பகுதியில் ஏர்பூட்டு விழா

Chithra / Oct 8th 2024, 3:20 pm
image

 

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் புளியூத்து குள விவசாய பகுதியில் ஏர்பூட்டு விழா இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த பகுதி விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி கலந்து சிறப்பித்தார்.

பெரும்போக நெற்செய்கைக்கான வயல் விதைப்பு இடம் பெறவுள்ள நிலையில் இயந்திரம் மூலமான ஏர்பூட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தம்பலகாமம் பிரதேச கமநல சேவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



தம்பலகாமம் விவசாய பகுதியில் ஏர்பூட்டு விழா  திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் புளியூத்து குள விவசாய பகுதியில் ஏர்பூட்டு விழா இடம்பெற்றது.குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.குறித்த பகுதி விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி கலந்து சிறப்பித்தார்.பெரும்போக நெற்செய்கைக்கான வயல் விதைப்பு இடம் பெறவுள்ள நிலையில் இயந்திரம் மூலமான ஏர்பூட்டு நிகழ்வு இடம்பெற்றது.இதில் தம்பலகாமம் பிரதேச கமநல சேவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement