• May 17 2024

புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு...! நோயாளர்களின் நிலை? samugammedia

Sharmi / Sep 16th 2023, 10:08 am
image

Advertisement

புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்சான் பெல்லன,

ஐம்பதிற்கும் அதிகமான புற்றுநோய்க்கான மருந்துகள் நிறைவடைந்துள்ளன.

புற்றுநோய்க்கான மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைவாக நடவடிக்கை எடுத்த போதிலும் முன்வைக்கப்படவிருந்த விலை மனுக்கோரலை முன்வைக்காமல் அதனை மூடி நிராகரித்து விட்டார்கள்.

சரியான விடயங்களை செய்வதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்றது. ஆனால் அமைச்சர் அதிகாரிகள் கூறும் விதத்திலும் மருந்து நிறுவனங்கள் கூறும் விதத்திலும் செயற்படுகின்றார்.

இவர்கள் செய்த இந்த வேலையினால் அரச மருத்துவ அதிகாரிகள் திருட்டுதனமான செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டளை படி செயற்பட நேரிடுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு. நோயாளர்களின் நிலை samugammedia புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்சான் பெல்லன,ஐம்பதிற்கும் அதிகமான புற்றுநோய்க்கான மருந்துகள் நிறைவடைந்துள்ளன.புற்றுநோய்க்கான மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைவாக நடவடிக்கை எடுத்த போதிலும் முன்வைக்கப்படவிருந்த விலை மனுக்கோரலை முன்வைக்காமல் அதனை மூடி நிராகரித்து விட்டார்கள்.சரியான விடயங்களை செய்வதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்றது. ஆனால் அமைச்சர் அதிகாரிகள் கூறும் விதத்திலும் மருந்து நிறுவனங்கள் கூறும் விதத்திலும் செயற்படுகின்றார்.இவர்கள் செய்த இந்த வேலையினால் அரச மருத்துவ அதிகாரிகள் திருட்டுதனமான செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டளை படி செயற்பட நேரிடுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement