• Nov 28 2024

லிட்ரோ எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு..! கடும் சிரமத்தில் மக்கள், ஹோட்டல் உரிமையாளர்கள்

Chithra / Jul 22nd 2024, 3:48 pm
image


ஹட்டன் நகரில் நிலவும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலைமைகள் குறித்து சில ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சில எரிவாயு பாவனையாளர்களிடம் கேட்டபோது, ​​

இரண்டு மூன்று நாட்களாக நகரின் எரிவாயு சந்தையில் எரிவாயு கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர்.

அரசாங்கம் மேற்கொள்ளும் பொருட்களின் விலை குறைப்பு, எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்காமல் தடுக்கவும், பற்றாக்குறையை ஏற்படுத்தவும் இந்த எரிவாயு தட்டுப்பாட்டின் பின்னணியில் சதி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந் நிலைமைகள் தொடர்பில் நகரிலுள்ள பல எரிவாயு வர்த்தகர்களிடம் கேட்டபோது, ​​

கினிகத்தேனை பிராந்திய எரிவாயு விநியோக நிலையத்திலிருந்து மூன்று நான்கு நாட்களாக எரிவாயு விநியோகம் செய்யபடாமையால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தனது கடையில் உள்ள வெற்று எரிவாயு சிலிண்டர்களை கினிகத்தேனை மாவட்ட விநியோக நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போதிலும், மூன்று நான்கு நாட்களாக அந்த நிலையத்திலிருந்து தனக்கு எரிவாயு கிடைக்கவில்லை என மற்றுமொரு வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிலைமையால் எரிவாயு தட்டுப்பாட்டால் எரிவாயு விற்பனை செய்யும் தாங்களும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என தெரிவிக்கின்றனர்.

லிட்ரோ எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு. கடும் சிரமத்தில் மக்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் ஹட்டன் நகரில் நிலவும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இந்த நிலைமைகள் குறித்து சில ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சில எரிவாயு பாவனையாளர்களிடம் கேட்டபோது, ​​இரண்டு மூன்று நாட்களாக நகரின் எரிவாயு சந்தையில் எரிவாயு கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர்.அரசாங்கம் மேற்கொள்ளும் பொருட்களின் விலை குறைப்பு, எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்காமல் தடுக்கவும், பற்றாக்குறையை ஏற்படுத்தவும் இந்த எரிவாயு தட்டுப்பாட்டின் பின்னணியில் சதி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந் நிலைமைகள் தொடர்பில் நகரிலுள்ள பல எரிவாயு வர்த்தகர்களிடம் கேட்டபோது, ​​கினிகத்தேனை பிராந்திய எரிவாயு விநியோக நிலையத்திலிருந்து மூன்று நான்கு நாட்களாக எரிவாயு விநியோகம் செய்யபடாமையால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.தனது கடையில் உள்ள வெற்று எரிவாயு சிலிண்டர்களை கினிகத்தேனை மாவட்ட விநியோக நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போதிலும், மூன்று நான்கு நாட்களாக அந்த நிலையத்திலிருந்து தனக்கு எரிவாயு கிடைக்கவில்லை என மற்றுமொரு வர்த்தகர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த நிலைமையால் எரிவாயு தட்டுப்பாட்டால் எரிவாயு விற்பனை செய்யும் தாங்களும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement