• May 19 2024

அரச மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு! அமைச்சர் தகவல் samugammedia

Chithra / Apr 27th 2023, 3:22 pm
image

Advertisement

அரச மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது 112 வகையான மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் (27.04.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது 1,347 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றில் 150 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வருடாந்தம் 50 பில்லியன் ரூபாயை செலவழிக்கிறது.

அதாவது 13.6 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த நிலையில், அமைச்சரவையின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மேலும் 40 பில்லியன் ரூபாயை நிதியமைச்சு ஒதுக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரச மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு அமைச்சர் தகவல் samugammedia அரச மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அதன்படி தற்போது 112 வகையான மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய தினம் (27.04.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது 1,347 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றில் 150 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வருடாந்தம் 50 பில்லியன் ரூபாயை செலவழிக்கிறது.அதாவது 13.6 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த நிலையில், அமைச்சரவையின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மேலும் 40 பில்லியன் ரூபாயை நிதியமைச்சு ஒதுக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement