• Nov 24 2024

நாடு முழுவதிலும் அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு - பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்கள்!

Tamil nila / Oct 20th 2024, 8:00 am
image

சந்தையில் தேங்காய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள பின்னணியில் சில நாட்களாகச் சில்லறை சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. 

 இந்த நிலையில் சந்தையில் அதிக கேள்வி நிலவும் நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். 

 இவ்வாறான பின்னணியில், தமது சங்கத்தில் உள்ள வர்த்தகர்களிடம் தேவையான அளவு அரிசி இருந்தாலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு கேற்ப அரிசியை விற்பனை செய்ய முடியாதென மரதன்கடவல அரிசி வர்த்தகர்களின் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ். ரணசிங்க தெரிவித்துள்ளார். 

 சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்துள்ளார். 

 இலங்கையிலுள்ள பாரியளவில் அரிசி விற்பனையில் ஈடுபடும் 5 வர்த்தகர்கள் இதற்காகக் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 


நாடு முழுவதிலும் அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு - பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்கள் சந்தையில் தேங்காய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள பின்னணியில் சில நாட்களாகச் சில்லறை சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.  இந்த நிலையில் சந்தையில் அதிக கேள்வி நிலவும் நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.  இவ்வாறான பின்னணியில், தமது சங்கத்தில் உள்ள வர்த்தகர்களிடம் தேவையான அளவு அரிசி இருந்தாலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு கேற்ப அரிசியை விற்பனை செய்ய முடியாதென மரதன்கடவல அரிசி வர்த்தகர்களின் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ். ரணசிங்க தெரிவித்துள்ளார்.  சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்துள்ளார்.  இலங்கையிலுள்ள பாரியளவில் அரிசி விற்பனையில் ஈடுபடும் 5 வர்த்தகர்கள் இதற்காகக் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement