• Nov 18 2024

நாட்டில் அரிசிக்கு தொடரும் தட்டுப்பாடு - அரசிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

Chithra / Nov 18th 2024, 8:33 am
image

 

அரிசி பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் 2 மாதங்களுக்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை அத்தியாவசிய உணவு வர்த்தகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. 

பாரியளவான வர்த்தகர்களைப் பாதுகாக்காமல் மக்களைப் பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என அந்த சங்கம் கோரியுள்ளது.

இதனிடையே தற்போது, சந்தையில் நாட்டு அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அதனுடன் சில பல்பொருள் அங்காடிகள் நாட்டு அரிசி விற்பனையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. 

அதன்படி குறித்த அங்காடிகளில், நாளொன்றுக்கு ஒருவர் 3 கிலோ கிராமிற்கு அதிகமாக அரிசியைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அதேநேரம், சில வர்த்தக நிலையங்கள் அரிசியைப் பணத்திற்கு மாத்திரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.

நாட்டில் அரிசிக்கு தொடரும் தட்டுப்பாடு - அரசிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை  அரிசி பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் 2 மாதங்களுக்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை அத்தியாவசிய உணவு வர்த்தகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. பாரியளவான வர்த்தகர்களைப் பாதுகாக்காமல் மக்களைப் பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என அந்த சங்கம் கோரியுள்ளது.இதனிடையே தற்போது, சந்தையில் நாட்டு அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனுடன் சில பல்பொருள் அங்காடிகள் நாட்டு அரிசி விற்பனையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி குறித்த அங்காடிகளில், நாளொன்றுக்கு ஒருவர் 3 கிலோ கிராமிற்கு அதிகமாக அரிசியைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், சில வர்த்தக நிலையங்கள் அரிசியைப் பணத்திற்கு மாத்திரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement