• May 09 2024

சிங்கப்பூர் பறக்கிறார் ஜனாதிபதி ரணில் - நான்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்! samugammedia

Chithra / Aug 20th 2023, 6:33 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஏனைய உயர்மட்ட பிரமுகர்களை சந்திக்க உள்ளார். 

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் கார்பன் நடுநிலை ஒப்பந்தமும் அவரது பயணத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராகவும், கனக ஹேரத், தொழில்நுட்ப அமைச்சராகவும், அனுப பெஸ்குவால், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சிங்கப்பூர் பறக்கிறார் ஜனாதிபதி ரணில் - நான்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமனம் samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஏனைய உயர்மட்ட பிரமுகர்களை சந்திக்க உள்ளார். பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் கார்பன் நடுநிலை ஒப்பந்தமும் அவரது பயணத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி, பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராகவும், கனக ஹேரத், தொழில்நுட்ப அமைச்சராகவும், அனுப பெஸ்குவால், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement