• May 20 2024

ரத்வத்தை சம்பவம் - களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம்! samugammedia

Chithra / Aug 20th 2023, 6:38 pm
image

Advertisement

மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்திருந்தார். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர் அழைத்த நிலையில், தோட்ட நிர்வாகத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, தோட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஜீவன் தொண்டமான் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

அதையடுத்து, தோட்ட உயர் அதிகாரி ஒருவர் வருகைத் தந்த நிலையில், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

உடைந்த வீட்டிற்கு பதிலாக, புதிய வீடொன்றை கட்டிக்கொடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த குடும்பம் தற்போது வாழும் லயன் அறைகளிலுள்ள 10 குடும்பங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் ஊடாக வீடுகளை கட்டிக் கொடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமிக்கு ஆலோசனை வழங்கினார். 


ரத்வத்தை சம்பவம் - களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம் samugammedia மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்திருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர் அழைத்த நிலையில், தோட்ட நிர்வாகத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, தோட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஜீவன் தொண்டமான் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.அதையடுத்து, தோட்ட உயர் அதிகாரி ஒருவர் வருகைத் தந்த நிலையில், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.உடைந்த வீட்டிற்கு பதிலாக, புதிய வீடொன்றை கட்டிக்கொடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டார்.அத்துடன், குறித்த குடும்பம் தற்போது வாழும் லயன் அறைகளிலுள்ள 10 குடும்பங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் ஊடாக வீடுகளை கட்டிக் கொடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமிக்கு ஆலோசனை வழங்கினார். 

Advertisement

Advertisement

Advertisement