• Feb 04 2025

தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை - கரிநாள் போராட்டத்திற்கு கஜேந்திரகுமார் எம்.பி. அழைப்பு

Chithra / Feb 4th 2025, 7:47 am
image

 

இலங்கையின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஸ்டித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேச மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.

அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர்.

அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.

அடிமை சாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கிற அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

இவ்வாறான நிலைமையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாகத் தான் பார்ப்பது எம்முடைய மரபாக இருக்கிறது.

அந்த வகையில் சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஸ்டித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

அவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கில் நடக்கவுள்ள இந்த கரிநாள் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்ள உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.


தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை - கரிநாள் போராட்டத்திற்கு கஜேந்திரகுமார் எம்.பி. அழைப்பு  இலங்கையின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஸ்டித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேச மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது.இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர்.அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.அடிமை சாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கிற அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.இவ்வாறான நிலைமையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாகத் தான் பார்ப்பது எம்முடைய மரபாக இருக்கிறது.அந்த வகையில் சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஸ்டித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.அவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கில் நடக்கவுள்ள இந்த கரிநாள் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்ள உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement