சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் புதிய விலை விபரங்களைக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அதன்படி 92 ரக ஒக்ரைன் பெட்ரோலின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 365 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
95 ரக ஒக்ரைன் பெட்ரோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.
ஓட்டோ டீசல் 27 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 333 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 377 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினோபெக்கின் எரிபொருள் விலையும் குறைப்பு. வெளியான புதிய அறிவிப்பு சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்தது.இந்த நிலையில் சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் புதிய விலை விபரங்களைக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.அதன்படி 92 ரக ஒக்ரைன் பெட்ரோலின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 365 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.95 ரக ஒக்ரைன் பெட்ரோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.ஓட்டோ டீசல் 27 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 333 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.சுப்பர் டீசல் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 377 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.