• May 19 2024

சினொபெக் நிறுவனத்தின் விலை குறைப்பு - தொடர் நட்டத்தை சந்திக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்..! samugammedia

Chithra / Oct 19th 2023, 1:35 pm
image

Advertisement

 

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்து கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர்கள் நால்வரின் கையொப்பத்துடன் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்கு விசேட கடிதமொன்று அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்நாட்டு எரிபொருள் சந்தையில் இணையும் நிறுவனங்கள் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்வதனால் கூட்டுத்தாபனத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுகிறது. 

தற்போது வரையில் சீனாவுக்கு சொந்தமான சினொபெக் நிறுவனம் ஒரு லீற்றர் எரிபொருளை கூட்டுத்தாபனத்தின் விலையை விட 07 ரூபாவுக்கு குறைவாகவே விற்பனை செய்கிறது.

அதன் காரணமாக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகைதந்த நுகர்வோர் வெளிநாட்டு நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். 

அதன் காரணமாக கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை சந்தித்து வருகிறது. 

இந்நிலைமையை மாற்றியமைத்து கூட்டுத்தாபனம் மற்றும் சினொபெக் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை விலையை சாதாரண விலையில் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். 

அவ்வாறு சாதாரண விலையில் எரிபொருளை விற்பனை செய்து பெற்றோலியக் கூட்டுதாபனத்தை இலாபமடையும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு இருக்கும் வாய்ப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேற்குறித்த கடிதம் அனுப்பப்பட்டு 75 நாட்கள் கடந்துள்ளபோதும் அமைச்சின் செயலாளர் இதுவரை அதற்கான எந்த பதிலையும் அளிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினொபெக் நிறுவனத்தின் விலை குறைப்பு - தொடர் நட்டத்தை சந்திக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம். samugammedia  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்து கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர்கள் நால்வரின் கையொப்பத்துடன் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்கு விசேட கடிதமொன்று அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,உள்நாட்டு எரிபொருள் சந்தையில் இணையும் நிறுவனங்கள் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்வதனால் கூட்டுத்தாபனத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுகிறது. தற்போது வரையில் சீனாவுக்கு சொந்தமான சினொபெக் நிறுவனம் ஒரு லீற்றர் எரிபொருளை கூட்டுத்தாபனத்தின் விலையை விட 07 ரூபாவுக்கு குறைவாகவே விற்பனை செய்கிறது.அதன் காரணமாக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகைதந்த நுகர்வோர் வெளிநாட்டு நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். அதன் காரணமாக கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிலைமையை மாற்றியமைத்து கூட்டுத்தாபனம் மற்றும் சினொபெக் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை விலையை சாதாரண விலையில் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு சாதாரண விலையில் எரிபொருளை விற்பனை செய்து பெற்றோலியக் கூட்டுதாபனத்தை இலாபமடையும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு இருக்கும் வாய்ப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் மேற்குறித்த கடிதம் அனுப்பப்பட்டு 75 நாட்கள் கடந்துள்ளபோதும் அமைச்சின் செயலாளர் இதுவரை அதற்கான எந்த பதிலையும் அளிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement