• May 03 2024

ஆறரை இலட்சம் ரூபாவிற்கு அடகு வைக்கப்பட்ட ஆறு குளிரூட்டிகள்: தில்லாலங்கடி வேலை அம்பலம்! SamugamMedia

Tamil nila / Mar 9th 2023, 8:23 pm
image

Advertisement

வாடகை வீடொன்றில் இருந்து சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்  அதுதொடர்பில் பெண்ணொருவர் கினிகத்தேனையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கஹதுடுவ பொல்கசோவிடவில் உள்ள கடையொன்றில் ஆறரை இலட்சம் ரூபாவிற்கு அடகு வைக்கப்பட்டிருந்த ஆறு குளிரூட்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


வீட்டின் உரிமையாளரிடம் இருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் வீட்டுக்குச் சென்று குளிரூட்டிகள் தொடர்பில் ஆராய்ந்த போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 6 குளிரூட்டிகளும் காணாமல் போயிருந்ததைக் காணமுடிந்ததாக கஹதுடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.



திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சந்தேகநபர் அறிந்ததும், தலைமறைவாகியுள்ளார்.



இதேவேளை, குறித்த பெண் சந்தேகநபரின் கணவரும் பல்வேறு நபர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


30 வயதான சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  


ஆறரை இலட்சம் ரூபாவிற்கு அடகு வைக்கப்பட்ட ஆறு குளிரூட்டிகள்: தில்லாலங்கடி வேலை அம்பலம் SamugamMedia வாடகை வீடொன்றில் இருந்து சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்  அதுதொடர்பில் பெண்ணொருவர் கினிகத்தேனையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.கஹதுடுவ பொல்கசோவிடவில் உள்ள கடையொன்றில் ஆறரை இலட்சம் ரூபாவிற்கு அடகு வைக்கப்பட்டிருந்த ஆறு குளிரூட்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.வீட்டின் உரிமையாளரிடம் இருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் வீட்டுக்குச் சென்று குளிரூட்டிகள் தொடர்பில் ஆராய்ந்த போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 6 குளிரூட்டிகளும் காணாமல் போயிருந்ததைக் காணமுடிந்ததாக கஹதுடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சந்தேகநபர் அறிந்ததும், தலைமறைவாகியுள்ளார்.இதேவேளை, குறித்த பெண் சந்தேகநபரின் கணவரும் பல்வேறு நபர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.30 வயதான சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement