• Nov 26 2024

யாழின் முக்கிய பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது...!

Sharmi / May 4th 2024, 1:54 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்றையதினம்(03) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  அறுவர் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை  மேற்கொண்டுவருகின்ற நிலையில், இதன் ஒரு பகுதியாக நேற்று சாலை கடற்பகுதியில் வைத்து குறித்த ஆறுபேரும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.





யாழின் முக்கிய பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது. யாழ் வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்றையதினம்(03) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  அறுவர் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை  மேற்கொண்டுவருகின்ற நிலையில், இதன் ஒரு பகுதியாக நேற்று சாலை கடற்பகுதியில் வைத்து குறித்த ஆறுபேரும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement