• May 19 2024

மூச்சுத் திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் பெரும் சோகம்..! samugammedia

Chithra / Nov 5th 2023, 5:09 pm
image

Advertisement


திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூச்சுத் திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி காய்ச்சல் மற்றும் சலி  ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

திருகோணமலை - அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த தினுகி சத்ஷரணி (06 வயது) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக தடிமல் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், நெஞ்சில் சலி ஏற்பட்ட நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் குறித்த சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலையில் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.


மூச்சுத் திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழப்பு. தமிழர் பகுதியில் பெரும் சோகம். samugammedia திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூச்சுத் திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது.குறித்த சிறுமி காய்ச்சல் மற்றும் சலி  ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.திருகோணமலை - அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த தினுகி சத்ஷரணி (06 வயது) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த நான்கு நாட்களாக தடிமல் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், நெஞ்சில் சலி ஏற்பட்ட நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் குறித்த சிறுமியின் தாயார் தெரிவித்தார்.உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மரணம் தொடர்பிலான விசாரணைகளை நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலையில் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement