• Nov 26 2024

முல்லைத்தீவில் யாருமில்லா வீட்டில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய ஆறு இளைஞர்கள்!

Chithra / Aug 28th 2024, 8:44 am
image


முல்லைத்தீவு - உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் அறுவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள யாருமற்ற வீடொன்றில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் சார்ஜன் குணவர்த்தனவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.

இதில் உடையார்கட்டு குரவில் பகுதியினை சேர்ந்த நால்வர், புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இருவர் என 17 தொடக்கம் 24 வயதுடைய இளைஞர்கள் அறுவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், பதினேழாயிரம் ரூபா பணம் என்பவற்றுடன் 7 பொதிகளில் 90 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலதிக விசாரணைகளின் பின்னர்,

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


முல்லைத்தீவில் யாருமில்லா வீட்டில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய ஆறு இளைஞர்கள் முல்லைத்தீவு - உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் அறுவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள யாருமற்ற வீடொன்றில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் சார்ஜன் குணவர்த்தனவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.இதில் உடையார்கட்டு குரவில் பகுதியினை சேர்ந்த நால்வர், புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இருவர் என 17 தொடக்கம் 24 வயதுடைய இளைஞர்கள் அறுவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த இளைஞர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், பதினேழாயிரம் ரூபா பணம் என்பவற்றுடன் 7 பொதிகளில் 90 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலதிக விசாரணைகளின் பின்னர்,முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement