• Nov 25 2024

சிவலிங்கத்தை தரிசிக்கும் நாகம் - புளிய மரத்தில் பால் வடியும் அதிசயம்! யாழ். மக்கள் பரவசம்

Chithra / Mar 13th 2024, 4:31 pm
image


வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை  தெற்கு பகுதியில்  இராணுவத்தினரால்  சிறு கோயில்  போன்ற அமைப்புக்குள் பிள்ளையார், சிவலிங்கம்  மற்றும் இலட்சுமியின் உருவப்படமும்  வைத்து வழிபாடாற்றப்பட்டிருந்தது.

இந் நிலையில், காணி விடுவிப்புக்கு முன்னரான காலப்பகுதியில் குறித்த சிவலிங்கத்தை வெள்ளை நாக பாம்பு சுற்றியிருந்த காணொளியும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

குறிப்பாக  இந் நாக பாம்பானது வெள்ளிக் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் குறித்த வழிபாட்டிடத்திற்கு வருகை தருவதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை,  குறித்த  வழிபாட்டிடத்தில்  சிவலிங்கத்தை  நாகபாம்பு  தரிசித்த  பின்னர்  வழிபாட்டிட  எல்லையில்  உள்ள புளிய மரத்தில் பால் வடிந்ததைக் காணமுடிந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


சிவலிங்கத்தை தரிசிக்கும் நாகம் - புளிய மரத்தில் பால் வடியும் அதிசயம் யாழ். மக்கள் பரவசம் வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.இவ்வாறு விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை  தெற்கு பகுதியில்  இராணுவத்தினரால்  சிறு கோயில்  போன்ற அமைப்புக்குள் பிள்ளையார், சிவலிங்கம்  மற்றும் இலட்சுமியின் உருவப்படமும்  வைத்து வழிபாடாற்றப்பட்டிருந்தது.இந் நிலையில், காணி விடுவிப்புக்கு முன்னரான காலப்பகுதியில் குறித்த சிவலிங்கத்தை வெள்ளை நாக பாம்பு சுற்றியிருந்த காணொளியும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.குறிப்பாக  இந் நாக பாம்பானது வெள்ளிக் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் குறித்த வழிபாட்டிடத்திற்கு வருகை தருவதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.இதேவேளை,  குறித்த  வழிபாட்டிடத்தில்  சிவலிங்கத்தை  நாகபாம்பு  தரிசித்த  பின்னர்  வழிபாட்டிட  எல்லையில்  உள்ள புளிய மரத்தில் பால் வடிந்ததைக் காணமுடிந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement