• May 13 2024

இந்திய மருந்து பயன்படுத்தி இதுவரை காண்பார்வையை இழந்தோர் இத்தனை பேரா..! சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / May 9th 2023, 1:10 pm
image

Advertisement

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தி கண் அறுவை சிகிச்சை செய்ததால் காண்பார்வை பாதிப்பிற்கு உள்ளன 13 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நுவரெலியாவில் மட்டும் 10 நோயாளர்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

தேசிய கண் வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு நோயாளிகளின் பார்வை குறைந்துள்ளது என்றும் மற்றவர்களின் பார்வை பலவீனம் அடைந்துள்ளதாகவும் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பத்து நோயாளிகளும் தேசிய கண் வைத்தியசாலையில் மூவர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது மருத்துவத்தில் காணப்படும் ஒரு பிரச்சினை என்றும் இந்த சம்பவம் குறித்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் குறித்த மருந்தின் முழு தொகுப்பையும் திரும்பப் பெறுவதற்கான விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்ட வைத்தியசாலைகளில் கண் அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி இருந்தால் அவை குறித்து தங்களுக்குத் தெரிவிக்குமாறு அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


இந்திய மருந்து பயன்படுத்தி இதுவரை காண்பார்வையை இழந்தோர் இத்தனை பேரா. சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் samugammedia இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தி கண் அறுவை சிகிச்சை செய்ததால் காண்பார்வை பாதிப்பிற்கு உள்ளன 13 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை நுவரெலியாவில் மட்டும் 10 நோயாளர்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.தேசிய கண் வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் இரண்டு நோயாளிகளின் பார்வை குறைந்துள்ளது என்றும் மற்றவர்களின் பார்வை பலவீனம் அடைந்துள்ளதாகவும் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பத்து நோயாளிகளும் தேசிய கண் வைத்தியசாலையில் மூவர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.இது மருத்துவத்தில் காணப்படும் ஒரு பிரச்சினை என்றும் இந்த சம்பவம் குறித்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் குறித்த மருந்தின் முழு தொகுப்பையும் திரும்பப் பெறுவதற்கான விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்ட வைத்தியசாலைகளில் கண் அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.மேலும், இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி இருந்தால் அவை குறித்து தங்களுக்குத் தெரிவிக்குமாறு அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement