• May 04 2024

யாழ்ப்பாணத்தில் தென்பட்ட சூரிய கிரகணம்...!

Sharmi / Apr 9th 2024, 12:05 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(08)  சூரிய கிரகணகத்தை பார்க்க கூடியதாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு அமெரிக்காவை நேற்று கடந்து சென்ற பூரண சூரிய கிரகணத்தை மில்லியன் கணக்கான மக்கள் கண்டு களித்துள்ளனர்.

பூமிக்கும் சூரியனுக்கு நடுவிலான பாதையில் சந்திரன் பயணித்து, பூமியின் பார்வையிலிருந்து சூரியனை முழுமையாக மறைக்கும் போது பூரண சூரிய கிரகணம் ஏற்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் 32 மில்லியன் அளவிலான மக்கள் நேற்று ஏற்பட்ட இந்த பூரண சூரிய கிரகணத்தை முழுமையாகவும் ஏனையோர் பகுதியளிவிலும் காணக்கூடியதாக இருந்துள்ளது.

இந்நிலையில், பெருமளவிலான மக்கள், பூரண சூரிய கிரகணத்தை முழுமையாக பார்ப்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்றுகூடியுள்ளனர்.

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்கும் என்று நாசா அறிவித்திருந்தது.

அத்துடன், அமெரிக்க நாட்டில் இது போன்றதொரு அரிய சூரிய கிரகணம் மீண்டும் 2044ஆம் ஆண்டளவிலேயே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூரிய கிரகணத்தினை டெலஸ்க்கோப் மூலமாக இலங்கையில் உள்ள  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நேற்றையதினம் பார்க்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.




யாழ்ப்பாணத்தில் தென்பட்ட சூரிய கிரகணம். யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(08)  சூரிய கிரகணகத்தை பார்க்க கூடியதாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடக்கு அமெரிக்காவை நேற்று கடந்து சென்ற பூரண சூரிய கிரகணத்தை மில்லியன் கணக்கான மக்கள் கண்டு களித்துள்ளனர்.பூமிக்கும் சூரியனுக்கு நடுவிலான பாதையில் சந்திரன் பயணித்து, பூமியின் பார்வையிலிருந்து சூரியனை முழுமையாக மறைக்கும் போது பூரண சூரிய கிரகணம் ஏற்படுகின்றது.ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் 32 மில்லியன் அளவிலான மக்கள் நேற்று ஏற்பட்ட இந்த பூரண சூரிய கிரகணத்தை முழுமையாகவும் ஏனையோர் பகுதியளிவிலும் காணக்கூடியதாக இருந்துள்ளது.இந்நிலையில், பெருமளவிலான மக்கள், பூரண சூரிய கிரகணத்தை முழுமையாக பார்ப்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்றுகூடியுள்ளனர்.வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்கும் என்று நாசா அறிவித்திருந்தது.அத்துடன், அமெரிக்க நாட்டில் இது போன்றதொரு அரிய சூரிய கிரகணம் மீண்டும் 2044ஆம் ஆண்டளவிலேயே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சூரிய கிரகணத்தினை டெலஸ்க்கோப் மூலமாக இலங்கையில் உள்ள  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நேற்றையதினம் பார்க்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement