• Apr 28 2024

தமிழ் மக்களுக்கான தீர்வு..! பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதன் ஊடாவே அமையும்- வசந்த முதலிகே!SamugamMedia

Sharmi / Mar 25th 2023, 3:00 pm
image

Advertisement

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் ஊடாக வடக்கில் காணிப்பிரச்சனை, இராணுவ மாயக்கல் பிரச்சனை, மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் ஏனைய பிரச்சனைகள் தீர்ப்பதற்காக முதற்படியாக அமையுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பான பொதுக்கருத்தரங்கு இன்று யாழில் இடம்பெற்றபோது வசந்த முதலிகே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்கு மனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும். அதுவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு. அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆணித்தரமான எமது நிலைப்பாடு.தற்போது அரசாங்கம் புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர்.

அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர் என தெரிவித்தார்.



தமிழ் மக்களுக்கான தீர்வு. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதன் ஊடாவே அமையும்- வசந்த முதலிகேSamugamMedia பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் ஊடாக வடக்கில் காணிப்பிரச்சனை, இராணுவ மாயக்கல் பிரச்சனை, மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் ஏனைய பிரச்சனைகள் தீர்ப்பதற்காக முதற்படியாக அமையுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்துள்ளார்.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பான பொதுக்கருத்தரங்கு இன்று யாழில் இடம்பெற்றபோது வசந்த முதலிகே இவ்வாறு தெரிவித்திருந்தார்.வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்கு மனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும். அதுவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு. அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது.பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆணித்தரமான எமது நிலைப்பாடு.தற்போது அரசாங்கம் புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர்.அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement