• May 08 2024

ஊழல் குற்றச்சாட்டு : உக்ரைனில் சில அமைச்சர்கள் பதவி நீக்கம்!

Tamil nila / Jan 24th 2023, 6:22 pm
image

Advertisement

உக்ரைனில் பல அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக சில அமைச்சர்கள் பதவி நீக்கப்படுதற்கான வாய்ப்பிருப்பதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. 


உக்ரைன் ஜனாதிபதி செலன்ஷ்கியின் இரவு நேர உரையில், மூத்த மற்றும் கீழ் மட்டங்களில் உள்ள அமைச்சர்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மேற்கத்தைய நாடுகள் உக்ரைனுக்கு உதவிகள் வழங்குவதில் பாரிய சவால்களை எதிர்நோக்கக்கூடும் எனத் நிபுணர்கள் கருதுகின்றனர். 


கடந்த செப்டம்பரில் ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்வதற்காக 4 இலட்சம் கிக்பேக் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் துணை உள்கட்டமைப்பு அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


அதேபோல் பாதுகாப்பு அமைச்சகம் வீரர்களின் உணவுக்காக பெறுந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாக செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை தொழில்நுட்பப் பிழை ஏற்பட்டதாகவும் பணம் கைமாறவில்லை எனவும் கூறி மறுத்துள்ளனர். 

ஊழல் குற்றச்சாட்டு : உக்ரைனில் சில அமைச்சர்கள் பதவி நீக்கம் உக்ரைனில் பல அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக சில அமைச்சர்கள் பதவி நீக்கப்படுதற்கான வாய்ப்பிருப்பதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் ஜனாதிபதி செலன்ஷ்கியின் இரவு நேர உரையில், மூத்த மற்றும் கீழ் மட்டங்களில் உள்ள அமைச்சர்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மேற்கத்தைய நாடுகள் உக்ரைனுக்கு உதவிகள் வழங்குவதில் பாரிய சவால்களை எதிர்நோக்கக்கூடும் எனத் நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த செப்டம்பரில் ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்வதற்காக 4 இலட்சம் கிக்பேக் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் துணை உள்கட்டமைப்பு அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல் பாதுகாப்பு அமைச்சகம் வீரர்களின் உணவுக்காக பெறுந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாக செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை தொழில்நுட்பப் பிழை ஏற்பட்டதாகவும் பணம் கைமாறவில்லை எனவும் கூறி மறுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement