• May 18 2024

இலங்கை – சீனா நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் சீனா பயணம்! samugammedia

Chithra / Jun 22nd 2023, 2:04 pm
image

Advertisement

இலங்கை மற்றும் சீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிலொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

சீனத் தரப்பின் அழைப்பின் பிரகாரம் இவர்கள் எதிர்வரும் 24 முதல் 30 வரை Beijing, Ningbo, Shenzhen மற்றும் Guangzhou ஆகிய இடங்களுக்கு பயணிக்கவுள்ளனர்.

இதன்போது சீன தேசிய மக்கள் காங்கிரஸ், வெளியுறவு அமைச்சகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறை மற்றும் நகரசபையின் உயர் அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் ரயில்வே, துறைமுகங்கள், மின்சார வாகனங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் போன்றவற்றிலும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று குறித்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,


இலங்கை – சீனா நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் சீனா பயணம் samugammedia இலங்கை மற்றும் சீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிலொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.சீனத் தரப்பின் அழைப்பின் பிரகாரம் இவர்கள் எதிர்வரும் 24 முதல் 30 வரை Beijing, Ningbo, Shenzhen மற்றும் Guangzhou ஆகிய இடங்களுக்கு பயணிக்கவுள்ளனர்.இதன்போது சீன தேசிய மக்கள் காங்கிரஸ், வெளியுறவு அமைச்சகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறை மற்றும் நகரசபையின் உயர் அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.அத்துடன் ரயில்வே, துறைமுகங்கள், மின்சார வாகனங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் போன்றவற்றிலும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று குறித்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

Advertisement

Advertisement

Advertisement