• Oct 29 2025

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தின் சூரசம்ஹார நிகழ்வு!

shanuja / Oct 28th 2025, 10:38 am
image

கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு,ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை சிற்ப்பாக நடைபெற்றது.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமானது.முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கந்தசஸ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.

ஐந்து தினங்கள் பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.

இன்று பிற்பகல் சூரசம்ஹாரத்திற்கான வேல் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பெற்றுக்கொண்டு வேல்படையானது ஆலயத்தினை ஊர்வலமாக வந்தடைந்து. அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சூரன்போர் நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூதப்படை சூழ முருகப்பெருமான் ஊர்வலமாக சென்று சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தின் சூரசம்ஹார நிகழ்வு கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.மட்டக்களப்பு,ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை சிற்ப்பாக நடைபெற்றது.ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமானது.முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கந்தசஸ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.ஐந்து தினங்கள் பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.இன்று பிற்பகல் சூரசம்ஹாரத்திற்கான வேல் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பெற்றுக்கொண்டு வேல்படையானது ஆலயத்தினை ஊர்வலமாக வந்தடைந்து. அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சூரன்போர் நடாத்தப்பட்டது.ஆலயத்தின் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூதப்படை சூழ முருகப்பெருமான் ஊர்வலமாக சென்று சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement