• May 04 2024

மூதூரில், படைப்புழுக்களின் தாக்கத்திற்குள்ளாகிய சோளப் பயிர்ச் செய்கை!

Tamil nila / Dec 2nd 2022, 9:36 am
image

Advertisement

திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இத்திக்குளம் பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள சோளப் பயிர்ச் செய்கையானது படைப்புழுக்களின் தாக்கத்திற்குள்ளாகி வருவதாக சோளச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



நோய்க்கு விசிறும் எண்ணெய்கள் ,சோளம் விதைகள் போன்றவற்றை அதிகளவு விலைக்கு கொள்வனவு செய்தே இச்செய்கையை மேற்கொண்டு வரும் நிலையில் படைப்புழு தாக்குவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.



அரசாங்கம் தருவதாக கூறிய பசளைகளும் இதுவரை கிடைக்கவில்லை.பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் சோளச் செய்கையை மேற்கொண்டு வரும் நிலையில் படைப்புழு தமது சோளத்தை தாக்குவதால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.



படைப்புழுவின், தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மூதூர் - இத்திக்குளம் பகுதி சோளச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



இதுவிடயமாக மூதூர் விவசாய போதனாசிரியர் யூ.மினாஹிர் கருத்து தெரிவிக்கையில்.



இப்பகுதியில், சுமார் 30 ஏக்கருக்கு மேல் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் இச் செய்கையை படைப்புழுக்கள் தாக்குவதாக சோளச் செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். நான் நேரடியாக பார்வையிட்டபோது எனக்கு அந்த விடயத்தை அவதானிக்க முடிந்தது.இதுவிடயமாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரித்தார்.


மூதூரில், படைப்புழுக்களின் தாக்கத்திற்குள்ளாகிய சோளப் பயிர்ச் செய்கை திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இத்திக்குளம் பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள சோளப் பயிர்ச் செய்கையானது படைப்புழுக்களின் தாக்கத்திற்குள்ளாகி வருவதாக சோளச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.நோய்க்கு விசிறும் எண்ணெய்கள் ,சோளம் விதைகள் போன்றவற்றை அதிகளவு விலைக்கு கொள்வனவு செய்தே இச்செய்கையை மேற்கொண்டு வரும் நிலையில் படைப்புழு தாக்குவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.அரசாங்கம் தருவதாக கூறிய பசளைகளும் இதுவரை கிடைக்கவில்லை.பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் சோளச் செய்கையை மேற்கொண்டு வரும் நிலையில் படைப்புழு தமது சோளத்தை தாக்குவதால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.படைப்புழுவின், தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மூதூர் - இத்திக்குளம் பகுதி சோளச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இதுவிடயமாக மூதூர் விவசாய போதனாசிரியர் யூ.மினாஹிர் கருத்து தெரிவிக்கையில்.இப்பகுதியில், சுமார் 30 ஏக்கருக்கு மேல் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் இச் செய்கையை படைப்புழுக்கள் தாக்குவதாக சோளச் செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். நான் நேரடியாக பார்வையிட்டபோது எனக்கு அந்த விடயத்தை அவதானிக்க முடிந்தது.இதுவிடயமாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரித்தார்.

Advertisement

Advertisement

Advertisement