• Dec 12 2024

அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை -தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

Tamil nila / Dec 12th 2024, 8:35 pm
image

தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும்  இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும்  வலியுறுத்தி  அம்பாறை மாவட்டம்  ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு  தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12)  இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  


 சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இதன் போது தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரி  தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  பின்னர்   வளாகத்தினுள் ஊர்வலமாக தீப்பந்தம் ஏந்தி  இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் போலித் தீர்வுகள் வேண்டாம், விடுதி வசதிகளை விரிவுபடுத்து ,தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தினுள் உடனடியாக  அழைக்கவும் , மாணவர்களை துன்புறுத்தாதே,  மணவர்கள் மீதான அடக்க முறை நிறுத்து,  போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை -தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும்  இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும்  வலியுறுத்தி  அம்பாறை மாவட்டம்  ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு  தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12)  இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.இதன் போது தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரி  தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  பின்னர்   வளாகத்தினுள் ஊர்வலமாக தீப்பந்தம் ஏந்தி  இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் போலித் தீர்வுகள் வேண்டாம், விடுதி வசதிகளை விரிவுபடுத்து ,தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தினுள் உடனடியாக  அழைக்கவும் , மாணவர்களை துன்புறுத்தாதே,  மணவர்கள் மீதான அடக்க முறை நிறுத்து,  போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement