• Jan 15 2025

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் - பதவி விலகவுள்ளார்

Tharmini / Dec 8th 2024, 9:59 am
image

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவி விலகப்போவதாக அவரின் ஆளும் கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

பதவி விலகும்வரை யூன், உள்துறை, வெளியுறவு விவகாரங்களில் ஈடுபடமாட்டார் என்றும் ஆளும் மக்கள் சக்திக் கட்சித் (People Power Party) தலைவர் ஹான் டோங்-ஹூன் இன்று (08) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

யூன், இம்மாதம் (03) திகதின்று சிறிது நேரத்துக்கு  இராணுவ ஆட்சி சட்டத்தை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. 

அதனையொட்டி நேற்று (07) அவர் மீது நடத்தப்பட்ட கண்டனத் தீர்மானம் தோல்வியடைந்தது.

அதன் பின்னர் இன்று (08 )கட்சித் தலைவர் ஹான் டோங்-ஹூனும் தென்கொரியப் பிரதமர் ஹான் டுக்-சூவும் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் யூன் பதவி விலகப்போவதை அறிவித்தனர்.

“அரசாங்கம் அடக்கத்துடன் இயங்கும். ஒத்துழைக்குமாறு நாடாளுமன்றத்தை வேண்டுகிறோம்,” என்றார் ஹான்.

“உள்நாட்டு விவகாரங்கள் நிர்வகிக்கப்படுவதில் இடையூறுகள் வரக்கூடாது,” என்றும் அவர் சொன்னார். 

தற்போது நிலவும் நிலையற்ற அரசியல் சூழலில் ஆக்ககரமான முறையில் ஆட்சி செய்யும் நோக்குடன் வரவு செலவுத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பது முக்கியத்துவம்வாய்ந்தது என்று ஹான் வலியுறுத்தினார்.

முன்னதாக இன்று (08) காலை முன்னாள் தென்கொரிய தற்காப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியுன் கைதுசெய்யப்பட்டார் என்று அந்நாட்டின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. 

அதிபர் யூன் இராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியதில் முக்கியப் பங்கு இருந்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் கிம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்துமாறு யூனுக்கு அறிவுரை வழங்கியதன் மூலம் எதிர்ப்புக் குரலை எழச் செய்ததாக நம்பப்படுவதன் தொடர்பில் கிம் கைது செய்யப்பட்டார் என்று தி கொரிய ஹேரல்ட் (The Korea Herald) ஊடகம் செய்தி வெளியிட்டது. 

கிம், ஆறு மணிநேரம் நீடித்த இராணுவ ஆட்சி சட்டத்தின் தொடர்பில் கைதாகியிருக்கும் முதல் நபர் என்றும் கொரிய ஹேரல்ட் குறிப்பிட்டது.

தென்கொரிய தேசிய காவல்துறையினர் திரு கிம்மின் அலுவலகத்தைச் சோதனையிட்டதாகவும் யோன்ஹாப் தெரிவித்தது. 

யூன், இதர அமைச்சர்கள் நாட்டுக்கு துரோகம் இழைத்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அங்கமாக கிம்மின் அலுவலகம் சோதனையிடப்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது. 

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் - பதவி விலகவுள்ளார் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவி விலகப்போவதாக அவரின் ஆளும் கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.பதவி விலகும்வரை யூன், உள்துறை, வெளியுறவு விவகாரங்களில் ஈடுபடமாட்டார் என்றும் ஆளும் மக்கள் சக்திக் கட்சித் (People Power Party) தலைவர் ஹான் டோங்-ஹூன் இன்று (08) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.யூன், இம்மாதம் (03) திகதின்று சிறிது நேரத்துக்கு  இராணுவ ஆட்சி சட்டத்தை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. அதனையொட்டி நேற்று (07) அவர் மீது நடத்தப்பட்ட கண்டனத் தீர்மானம் தோல்வியடைந்தது.அதன் பின்னர் இன்று (08 )கட்சித் தலைவர் ஹான் டோங்-ஹூனும் தென்கொரியப் பிரதமர் ஹான் டுக்-சூவும் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் யூன் பதவி விலகப்போவதை அறிவித்தனர்.“அரசாங்கம் அடக்கத்துடன் இயங்கும். ஒத்துழைக்குமாறு நாடாளுமன்றத்தை வேண்டுகிறோம்,” என்றார் ஹான்.“உள்நாட்டு விவகாரங்கள் நிர்வகிக்கப்படுவதில் இடையூறுகள் வரக்கூடாது,” என்றும் அவர் சொன்னார். தற்போது நிலவும் நிலையற்ற அரசியல் சூழலில் ஆக்ககரமான முறையில் ஆட்சி செய்யும் நோக்குடன் வரவு செலவுத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பது முக்கியத்துவம்வாய்ந்தது என்று ஹான் வலியுறுத்தினார்.முன்னதாக இன்று (08) காலை முன்னாள் தென்கொரிய தற்காப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியுன் கைதுசெய்யப்பட்டார் என்று அந்நாட்டின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. அதிபர் யூன் இராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியதில் முக்கியப் பங்கு இருந்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் கிம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.இராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்துமாறு யூனுக்கு அறிவுரை வழங்கியதன் மூலம் எதிர்ப்புக் குரலை எழச் செய்ததாக நம்பப்படுவதன் தொடர்பில் கிம் கைது செய்யப்பட்டார் என்று தி கொரிய ஹேரல்ட் (The Korea Herald) ஊடகம் செய்தி வெளியிட்டது. கிம், ஆறு மணிநேரம் நீடித்த இராணுவ ஆட்சி சட்டத்தின் தொடர்பில் கைதாகியிருக்கும் முதல் நபர் என்றும் கொரிய ஹேரல்ட் குறிப்பிட்டது.தென்கொரிய தேசிய காவல்துறையினர் திரு கிம்மின் அலுவலகத்தைச் சோதனையிட்டதாகவும் யோன்ஹாப் தெரிவித்தது. யூன், இதர அமைச்சர்கள் நாட்டுக்கு துரோகம் இழைத்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அங்கமாக கிம்மின் அலுவலகம் சோதனையிடப்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது. 

Advertisement

Advertisement

Advertisement