• Nov 26 2024

வடகொரியா-ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்ததிற்கு அங்கீகாரம்- தென்கொரிய வெளியுறவு அமைச்சு கண்டனம்!

Tamil nila / Oct 25th 2024, 8:40 pm
image

வடகொரியா – ரஷ்யா இடையேயான தற்காப்பு ஒப்பந்தம் ரஷ்ய நாடாளுமன்றத்தில் ஒருமனதாக வியாழக்கிழமை  அங்கீகரிக்கப்பட்டது. இதற்குத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) வெளியிட்ட செய்தியில், பியோங்யாங் உடனான சட்டவிரோத ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்துமாறு மாஸ்கோவைக் கேட்டுகொண்டது.

ரஷ்யா, வடகொரியா ஆகிய இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.

ஆயிரக்கணக்கான வடகொரிய ராணுவ வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படுவதாக தென்கொரியாவும் அமெரிக்காவும் குற்றம் சாட்டின.

ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் இருக்கும் போர் வட்டாரத்திற்குள் வடகொரிய வீரர்கள் நுழைந்ததாக உக்ரேன் கூறியது. இக்குற்றச்சாட்டுகளை வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்தன.

வடகொரியா – ரஷ்யா இடையேயான தற்காப்பு ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்ததும் வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதும் கவலை அளித்திருப்பதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

வடகொரியா-ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்ததிற்கு அங்கீகாரம்- தென்கொரிய வெளியுறவு அமைச்சு கண்டனம் வடகொரியா – ரஷ்யா இடையேயான தற்காப்பு ஒப்பந்தம் ரஷ்ய நாடாளுமன்றத்தில் ஒருமனதாக வியாழக்கிழமை  அங்கீகரிக்கப்பட்டது. இதற்குத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்நாட்டு அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) வெளியிட்ட செய்தியில், பியோங்யாங் உடனான சட்டவிரோத ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்துமாறு மாஸ்கோவைக் கேட்டுகொண்டது.ரஷ்யா, வடகொரியா ஆகிய இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.ஆயிரக்கணக்கான வடகொரிய ராணுவ வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படுவதாக தென்கொரியாவும் அமெரிக்காவும் குற்றம் சாட்டின.ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் இருக்கும் போர் வட்டாரத்திற்குள் வடகொரிய வீரர்கள் நுழைந்ததாக உக்ரேன் கூறியது. இக்குற்றச்சாட்டுகளை வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்தன.வடகொரியா – ரஷ்யா இடையேயான தற்காப்பு ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்ததும் வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதும் கவலை அளித்திருப்பதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

Advertisement

Advertisement

Advertisement