நாடாளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக பிரதிச் செயலாளர் நாயகமும் தலைமை அதிகாரியுமான திருமதி குஷானி அனுஷா ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சபாநாயகர் இதனை அறிவித்ததும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
சபாநாயகருடன் திருமதி ரோஹணதீர இன்று பிரதான நுழைவாயில் ஊடாக சபைக்குள் பிரவேசித்தார்.
முன்னாள் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, தான் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்து அனுப்பிய கடிதத்தையும் சபாநாயகர் வாசித்தார்.
நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் ஆற்றிய சேவையை சபாநாயகர் பாராட்டினார்.
நாடாளுமன்றத்தின் புதிய செயலாளரை சபையில் அறிவித்தார் சபாநாயகர். samugammedia நாடாளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக பிரதிச் செயலாளர் நாயகமும் தலைமை அதிகாரியுமான திருமதி குஷானி அனுஷா ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். சபாநாயகர் இதனை அறிவித்ததும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.சபாநாயகருடன் திருமதி ரோஹணதீர இன்று பிரதான நுழைவாயில் ஊடாக சபைக்குள் பிரவேசித்தார்.முன்னாள் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, தான் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்து அனுப்பிய கடிதத்தையும் சபாநாயகர் வாசித்தார்.நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் ஆற்றிய சேவையை சபாநாயகர் பாராட்டினார்.