நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும், நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டது.
நாடாளுமன்றம் நேற்று புதன்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார்.
முதலில் யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாகப் பேசிய அர்ச்சுனா பின்னர், தடம் மாறி நிலையியற் கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத் தொடங்கினார். அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர், விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதை மட்டும் பேசுமாறு வலியுறுத்தியபோதும் அர்ச்சுனா அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அர்ச்சுனா எம்.பி., முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரையும் கடுமையாக விமர்சித்தார். இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்து விடயத்துக்கு முரணாகவே கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "அர்ச்சுனா எம்.பி. யாழ். வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார். ஆனால், விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், இந்தக் கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை.
ஆகையால், இவருக்கு நாடாளுமன்றச் செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன். அத்துடன், இவர் விடயத்துக்கு முரணாகப் பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும்." - என்றார்.
இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரின் நிலையியற் கட்டளைகளுக்கு முறையான கருத்துக்களை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் அறிவித்தார்.
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து உடனே நீக்கிய சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும், நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டது.நாடாளுமன்றம் நேற்று புதன்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார்.முதலில் யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாகப் பேசிய அர்ச்சுனா பின்னர், தடம் மாறி நிலையியற் கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத் தொடங்கினார். அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர், விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதை மட்டும் பேசுமாறு வலியுறுத்தியபோதும் அர்ச்சுனா அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அர்ச்சுனா எம்.பி., முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரையும் கடுமையாக விமர்சித்தார். இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர்.நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்து விடயத்துக்கு முரணாகவே கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "அர்ச்சுனா எம்.பி. யாழ். வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார். ஆனால், விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், இந்தக் கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை. ஆகையால், இவருக்கு நாடாளுமன்றச் செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன். அத்துடன், இவர் விடயத்துக்கு முரணாகப் பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும்." - என்றார்.இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரின் நிலையியற் கட்டளைகளுக்கு முறையான கருத்துக்களை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் அறிவித்தார்.