• Nov 26 2024

காலி பிரதேசத்தின் அபிவிருத்திக்கு விசேட ஆணைக்குழு - ஜனாதிபதி பணிப்புரை..!samugammedia

mathuri / Jan 29th 2024, 5:50 am
image

காலி பிரதேசத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி, கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த போது காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை துரிதப்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

காலி கோட்டையில் அமைந்துள்ள அரச நிறுவனங்களையும் காரியாலயங்களையும் காலி கோட்டைக்கு வெளியே கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், அவற்றுக்கான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளதோடு காலி நகரத் திட்டத்தை அமுல்படுத்துவதில் நகர அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களும் ஒரே நிறுவனக் கட்டமைப்பின் கீழ் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

காலி பிரதேசத்தின் அபிவிருத்திக்கு விசேட ஆணைக்குழு - ஜனாதிபதி பணிப்புரை.samugammedia காலி பிரதேசத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி, கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த போது காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளார்.இதேவேளை குறித்த பகுதியில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை துரிதப்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.காலி கோட்டையில் அமைந்துள்ள அரச நிறுவனங்களையும் காரியாலயங்களையும் காலி கோட்டைக்கு வெளியே கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.அத்துடன், அவற்றுக்கான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளதோடு காலி நகரத் திட்டத்தை அமுல்படுத்துவதில் நகர அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களும் ஒரே நிறுவனக் கட்டமைப்பின் கீழ் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement