• Sep 20 2024

மருந்துகளின் விலை நிர்ணயத்திற்கு விசேட குழு நியமனம்!!

crownson / Dec 28th 2022, 2:19 pm
image

Advertisement

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.

இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதே சந்தர்ப்பத்தில் Global life shearing operation and world unreached people mission அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை ஆரோக்கியசாமி பிரான்சிஸ் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க இலங்கை நாட்டிற்கு இலவசமாக கடந்த வாரம் கொரியா நாட்டில் இருந்து 43 கோடி ரூபாய் பெருமதியான மருந்து பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த மருந்து பொருட்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

எதிர்வரும் தினங்களில் கொரியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருந்து பொருட்கள் அருட்தந்தை ஆரோக்கியசாமி பிரான்சிஸ் அவர்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மருந்துகளின் விலை நிர்ணயத்திற்கு விசேட குழு நியமனம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இந்த நிலையில், மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதே சந்தர்ப்பத்தில் Global life shearing operation and world unreached people mission அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை ஆரோக்கியசாமி பிரான்சிஸ் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க இலங்கை நாட்டிற்கு இலவசமாக கடந்த வாரம் கொரியா நாட்டில் இருந்து 43 கோடி ரூபாய் பெருமதியான மருந்து பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மருந்து பொருட்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் தினங்களில் கொரியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருந்து பொருட்கள் அருட்தந்தை ஆரோக்கியசாமி பிரான்சிஸ் அவர்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement