• May 13 2025

யாழில் தொடர்ந்து நான்கு நாள்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - மாவட்ட செயலர் பிரதீபன்

Tharmini / Dec 7th 2024, 5:01 pm
image

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவிக்கையில்,"யாழ்ப்பாணத்தில் மழைக்குப் பின்னரான சூழலில் டெங்கு பரவல் மிக அதிகமாகக் காணப்படுகின்றது.

அதனால் யாழ். மாநகர சபை ஆணையாளர் நகர மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கிராம அலுவலர் பிரிவு ரீதியாக பொருத்தமான பொறிமுறையூடாக நுளம்பு பெருகாது தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக காணிகளில் காணப்படும் வெற்றுக்கலன்களைச் சேகரித்து உரிய வகையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல பிரதேச செயலாளர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்ற அறிக்கையை 16 ஆம் திகதி அனுப்பி வைக்குமாறும் பிரதேச செயலர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.

யாழில் தொடர்ந்து நான்கு நாள்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - மாவட்ட செயலர் பிரதீபன் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவிக்கையில்,"யாழ்ப்பாணத்தில் மழைக்குப் பின்னரான சூழலில் டெங்கு பரவல் மிக அதிகமாகக் காணப்படுகின்றது.அதனால் யாழ். மாநகர சபை ஆணையாளர் நகர மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கிராம அலுவலர் பிரிவு ரீதியாக பொருத்தமான பொறிமுறையூடாக நுளம்பு பெருகாது தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.குறிப்பாக காணிகளில் காணப்படும் வெற்றுக்கலன்களைச் சேகரித்து உரிய வகையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல பிரதேச செயலாளர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்ற அறிக்கையை 16 ஆம் திகதி அனுப்பி வைக்குமாறும் பிரதேச செயலர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now