சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ,
அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (22) கலந்துரையாடினார்.
சுகாதார வல்லுநர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சரியான சுகாதார சேவையைப் பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய,
குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ACMOA), மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS),
அரசாங்க பல்மருத்துவ சங்கம் (GDSA), அகில இலங்கை தாதியர் சங்கம், பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் அரசாங்க தாதியர் சங்கம் ஆகியன பங்குபற்றவுள்ளன.
இதன்போது, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தமது தொழில் பிரச்சினைகளை சுகாதார அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சுடன் இணைந்து தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது எனவும் இதன் ஊடாக சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு முறையாக செயற்பட முடியும் எனவும் வலியுறுத்தினார்.
புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கு இடமளிக்காமல், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரின் ஆதரவையும் வழங்குமாறும் அமைச்சர் விசேட கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்த நாட்டில் இலவச சுகாதார சேவை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளதால், சுகாதார நிபுணர்களின் தொழில்சார் கௌரவத்தை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் பாதுகாக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் , பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நஜித் இந்திக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால,
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர்கள், பிரதி பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களுடன் விசேட கலந்துரையாடல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (22) கலந்துரையாடினார்.சுகாதார வல்லுநர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சரியான சுகாதார சேவையைப் பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய, குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ACMOA), மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS), அரசாங்க பல்மருத்துவ சங்கம் (GDSA), அகில இலங்கை தாதியர் சங்கம், பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் அரசாங்க தாதியர் சங்கம் ஆகியன பங்குபற்றவுள்ளன.இதன்போது, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தமது தொழில் பிரச்சினைகளை சுகாதார அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர். இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சுடன் இணைந்து தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது எனவும் இதன் ஊடாக சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு முறையாக செயற்பட முடியும் எனவும் வலியுறுத்தினார்.புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கு இடமளிக்காமல், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரின் ஆதரவையும் வழங்குமாறும் அமைச்சர் விசேட கோரிக்கை விடுத்தார்.மேலும், இந்த நாட்டில் இலவச சுகாதார சேவை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளதால், சுகாதார நிபுணர்களின் தொழில்சார் கௌரவத்தை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் பாதுகாக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இந்த கூட்டத்தில் , பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நஜித் இந்திக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர்கள், பிரதி பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.