மூதூர் பொலிஸ் பிரிவில் இன்று (25) அதிகாலை, நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில், போதை ஒழிப்புப் பிரிவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஆலிம்சேனை பகுதியில் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன், பாலத்தோப்பூர் பகுதியில் ஒருவர் 2.6 கிராம் ஐஸுடன் மற்றும் தோப்பூர் பகுதியில் ஒருவர் 2.8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், விற்பனைக்காக உடமையில் வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் தற்போது மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மூதூரில் அதிகாலையில் விசேட சுற்றிவளைப்பு: மூவர் கைது. மூதூர் பொலிஸ் பிரிவில் இன்று (25) அதிகாலை, நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில், போதை ஒழிப்புப் பிரிவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இதன்போது ஆலிம்சேனை பகுதியில் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன், பாலத்தோப்பூர் பகுதியில் ஒருவர் 2.6 கிராம் ஐஸுடன் மற்றும் தோப்பூர் பகுதியில் ஒருவர் 2.8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள், விற்பனைக்காக உடமையில் வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் தற்போது மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.