• May 17 2024

கொழும்பில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

Chithra / Feb 1st 2023, 12:33 pm
image

Advertisement

75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்துவார வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

சுதந்திர தின ஒத்திகை மற்றும் சுதந்திர தினத்தின் போது சாரதிகள் முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், விசேடமாக இந்த காலப்பகுதியில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஒத்திகை இடம்பெறும் காலை நேரங்களிலும், 4 ஆம் திகதி நாள் முழுவதும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவற்றைப் பயன்படுத்த விரும்பும் சாரதிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும். தடையின்றி பயணிக்க கூடிய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு நகரம் முழுவதும் தேவையான போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும். உங்கள் பயணங்களை முடிக்க மாற்று வழிகளைப் பயன்படுத்தவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு 75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்துவார வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.சுதந்திர தின ஒத்திகை மற்றும் சுதந்திர தினத்தின் போது சாரதிகள் முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், விசேடமாக இந்த காலப்பகுதியில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஒத்திகை இடம்பெறும் காலை நேரங்களிலும், 4 ஆம் திகதி நாள் முழுவதும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.இவற்றைப் பயன்படுத்த விரும்பும் சாரதிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும். தடையின்றி பயணிக்க கூடிய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.கொழும்பு நகரம் முழுவதும் தேவையான போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும். உங்கள் பயணங்களை முடிக்க மாற்று வழிகளைப் பயன்படுத்தவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement