• Jan 06 2025

வரி செலுத்துதல் தொடர்பில் விசேட அறிவிப்பு

Tax
Chithra / Dec 15th 2024, 4:14 pm
image

 

2024 நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது.

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கிற்கு அமைய செலுத்தப்பட வேண்டிய வரியை தொடர்ந்து செலுத்தாமல் தவறியிருந்தால், அதை டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு வரி வகைக்கு அமைவாக செலுத்த வேண்டிய சுயமதிப்பீட்டு வரி, நிலுவை வரி அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட கூடுதல் மதிப்பீட்டு வரியை டிசம்பர் 26-ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாவிட்டால் அதற்கான அபராத நிவாரணத்தை பெற முடியாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரி மற்றும் வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின்படி கள ஆய்வுப் பணிகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் உரிய அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துதல் தொடர்பில் விசேட அறிவிப்பு  2024 நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது.2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கிற்கு அமைய செலுத்தப்பட வேண்டிய வரியை தொடர்ந்து செலுத்தாமல் தவறியிருந்தால், அதை டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், எந்தவொரு வரி வகைக்கு அமைவாக செலுத்த வேண்டிய சுயமதிப்பீட்டு வரி, நிலுவை வரி அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட கூடுதல் மதிப்பீட்டு வரியை டிசம்பர் 26-ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாவிட்டால் அதற்கான அபராத நிவாரணத்தை பெற முடியாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரி மற்றும் வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின்படி கள ஆய்வுப் பணிகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் உரிய அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement