• May 01 2024

Channel 4 குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் குழு விசாரணை samugammedia

Chithra / Oct 16th 2023, 3:31 pm
image

Advertisement

 

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய Channel 4 தொலைக்காட்சி விடுத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை இன்று (16) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் சில அரசியல்வாதிகள் மற்றும் மூத்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பதாகவும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், விசாரணை நடத்துவது முக்கியம் என்று எம்.பி.க்கள் இந்தப் பிரேரணையில் தெரிவித்தனர்.

இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Channel 4 குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் குழு விசாரணை samugammedia  ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய Channel 4 தொலைக்காட்சி விடுத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை இன்று (16) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் சில அரசியல்வாதிகள் மற்றும் மூத்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பதாகவும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், விசாரணை நடத்துவது முக்கியம் என்று எம்.பி.க்கள் இந்தப் பிரேரணையில் தெரிவித்தனர்.இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement