வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி மிக பக்தி பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகிறது
மகா சிவராத்திரி நாளான இன்றைய நாள்(08) மாலை 6 மணிக்கு விசேட 108 சங்காபிஷேகம் இடம்பெற்று ஏழு மணியளவில் முதலாம் ஜாமபூசை இடம்பெற்றது
ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம சிவாச்சாரியார் ர.கீர்த்திவாசக்குருக்கள் அவர்களது தலைமையில் பூஜைகள் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நான்கு சாம பூஜைகள் இடம் பெற இருக்கின்றன
நாளை (09) காலை நான்காம் ஜாம அபிசேக பூஜைகளை தொடர்ந்து பூலோகநாயகி சமேத வேகாவனேஸ்வர பெருமான் உள்வீதி வெளி வீதி வலம் வரும் அருள்காட்சி இடம்பெறவுள்ளது
பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானை வழிபட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது அத்தோடு ஆலய வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட அபிஷேக பூசை வழிபாடுகள். வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி மிக பக்தி பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகிறதுமகா சிவராத்திரி நாளான இன்றைய நாள்(08) மாலை 6 மணிக்கு விசேட 108 சங்காபிஷேகம் இடம்பெற்று ஏழு மணியளவில் முதலாம் ஜாமபூசை இடம்பெற்றதுஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம சிவாச்சாரியார் ர.கீர்த்திவாசக்குருக்கள் அவர்களது தலைமையில் பூஜைகள் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நான்கு சாம பூஜைகள் இடம் பெற இருக்கின்றனநாளை (09) காலை நான்காம் ஜாம அபிசேக பூஜைகளை தொடர்ந்து பூலோகநாயகி சமேத வேகாவனேஸ்வர பெருமான் உள்வீதி வெளி வீதி வலம் வரும் அருள்காட்சி இடம்பெறவுள்ளது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானை வழிபட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது அத்தோடு ஆலய வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன