• Apr 16 2025

யாழ் - மன்னார் பிரதான வீதியில் திடீரென தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்..!!

Tamil nila / Mar 8th 2024, 11:19 pm
image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி இன்று மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது.


இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.

தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை யானது.


யாழ் - மன்னார் பிரதான வீதியில் திடீரென தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள். மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி இன்று மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது.இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை யானது.

Advertisement

Advertisement

Advertisement