திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று(02) காலை இடம்பெற்றது.
வாழ்வுரிமை மனித உரிமைகள் மையம், மனித உரிமைகள் முதலுதவி மையங்கள் ஆகியன இணைந்து இச் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.
இச் செயலமர்வின் போது மனித உரிமைகள் என்றால் என்ன?மீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் என்ன? மனித உரிமை மீறப்படும் போது எடுக்கபப்பட வேண்டிய மாற்றுவழி என்ன? உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பினர்,காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமலையில் மனித உரிமைகள் தொடர்பில் விசேட செயலமர்வு. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று(02) காலை இடம்பெற்றது.வாழ்வுரிமை மனித உரிமைகள் மையம், மனித உரிமைகள் முதலுதவி மையங்கள் ஆகியன இணைந்து இச் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.இச் செயலமர்வின் போது மனித உரிமைகள் என்றால் என்னமீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் என்ன மனித உரிமை மீறப்படும் போது எடுக்கபப்பட வேண்டிய மாற்றுவழி என்ன உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பினர்,காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.