• May 03 2024

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள முக்கிய நாட்டின் விசேட குழு..!samugammedia

Sharmi / Jul 28th 2023, 10:00 am
image

Advertisement

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (28) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரைத் தவிர, ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த வெளியுறவுக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் முரகாமி மனாபு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் அரிமா யுடகா, சர்வதேச ஒத்துழைப்பு இயக்குநர் ஜெனரல் எண்டோ கஷுவா மற்றும் துணை யூகிகோ ஒகானோ ஊடகச் செயலாளரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.

இதனிடையே இரண்டு நாட்கள் தங்கியிருந்து இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜப்பானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கை வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய வழிகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இலங்கையுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு மேலதிகமாக, ஜப்பானிய உதவியுடன் இலங்கையில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றத்தையும் அவதானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கைக்கு படையெடுக்கவுள்ள முக்கிய நாட்டின் விசேட குழு.samugammedia ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (28) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரைத் தவிர, ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த வெளியுறவுக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் முரகாமி மனாபு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் அரிமா யுடகா, சர்வதேச ஒத்துழைப்பு இயக்குநர் ஜெனரல் எண்டோ கஷுவா மற்றும் துணை யூகிகோ ஒகானோ ஊடகச் செயலாளரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளார். இதனிடையே இரண்டு நாட்கள் தங்கியிருந்து இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜப்பானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.இதனால், இலங்கை வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய வழிகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இலங்கையுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு மேலதிகமாக, ஜப்பானிய உதவியுடன் இலங்கையில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றத்தையும் அவதானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement