• Dec 28 2024

நாடாளாவிய ரீதியில் நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை!

Tamil nila / Dec 22nd 2024, 8:01 pm
image

நாடாளாவிய ரீதியில் நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

 அண்மைக்காலமாக பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வானங்களால் இடம்பெற்ற விபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான விபத்துக்களைக் குறைப்பதற்காக பதில் காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைக்கமைய இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

 அதன்படி, நாளை முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, நாடளாவிய ரீதியில் நாடு முழுவதும் இந்த போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.

 பிரதானமாக பொதுப் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் சோதனை செய்யப்படுவதுடன் அந்த பேருந்துகளின் சாரதிகள் குடிபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தி செலுத்துகின்றனரா? என்பதும் தொடர்பிலும் சோதனையிடப்படவுள்ளது.

 பேருந்து சாரதிகள் போதையில் வாகனம் செலுத்தினால் அது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 இந்த விசேட நடவடிக்கையின் போது, ​​கவனக்குறைவாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் தொடர்பாக 119 மற்றும் 1997 ஆகிய குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியும்.

நாடாளாவிய ரீதியில் நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை நாடாளாவிய ரீதியில் நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. அண்மைக்காலமாக பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வானங்களால் இடம்பெற்ற விபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான விபத்துக்களைக் குறைப்பதற்காக பதில் காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைக்கமைய இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது அதன்படி, நாளை முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, நாடளாவிய ரீதியில் நாடு முழுவதும் இந்த போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது. பிரதானமாக பொதுப் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் சோதனை செய்யப்படுவதுடன் அந்த பேருந்துகளின் சாரதிகள் குடிபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தி செலுத்துகின்றனரா என்பதும் தொடர்பிலும் சோதனையிடப்படவுள்ளது. பேருந்து சாரதிகள் போதையில் வாகனம் செலுத்தினால் அது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த விசேட நடவடிக்கையின் போது, ​​கவனக்குறைவாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் தொடர்பாக 119 மற்றும் 1997 ஆகிய குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியும்.

Advertisement

Advertisement

Advertisement