• May 18 2025

கல்முனையில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை..!

Sharmi / May 17th 2025, 6:02 pm
image

கல்முனையில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்று மாலை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை புறநகர்ப்பகுதி முதல் சாய்ந்தமருது புறநகர் கடற்கரை வீதி போன்ற இடங்களில் செய்யப்பட்டது.

இந்த திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைகவசம் அணியாமல் செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு அதிகமானவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் இடம்பெற்றது.

இதன் போது கல்முனை சம்மாந்துறை சவளைக்கடை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான புறா நகர வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 82 பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கல்முனையில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை. கல்முனையில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இன்று மாலை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை புறநகர்ப்பகுதி முதல் சாய்ந்தமருது புறநகர் கடற்கரை வீதி போன்ற இடங்களில் செய்யப்பட்டது.இந்த திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைகவசம் அணியாமல் செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு அதிகமானவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டது.இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் இடம்பெற்றது.இதன் போது கல்முனை சம்மாந்துறை சவளைக்கடை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான புறா நகர வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 82 பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement