பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி 16 வருடங்களுக்கு பிறகு நாளை 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, நாளை பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரைகண்காட்சி நடைபெறவுள்ளது.
அத்துடன் ,19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்படவுள்ளது.
கண்டி நகருக்குள் யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வருவதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இன்று முதல் கண்டி நகருக்குள் நுழையும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாத்திரிகர்களின் வாகனங்களுக்கு விசேட வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் அந்தப் பகுதிகளிலிருந்து ஸ்ரீ தலதா மாளிகைக்கு பேருந்து சேவைகள் மூலம் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தலதா மாளிகை யாத்திரைக்கான விசேட போக்குவரத்து திட்டம் பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி 16 வருடங்களுக்கு பிறகு நாளை 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி, நாளை பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரைகண்காட்சி நடைபெறவுள்ளது.அத்துடன் ,19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.இதன் காரணமாக, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.இந்நிலையில் தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்படவுள்ளது. கண்டி நகருக்குள் யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வருவதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இன்று முதல் கண்டி நகருக்குள் நுழையும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாத்திரிகர்களின் வாகனங்களுக்கு விசேட வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் அந்தப் பகுதிகளிலிருந்து ஸ்ரீ தலதா மாளிகைக்கு பேருந்து சேவைகள் மூலம் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.