• Apr 19 2025

பாணந்துறை கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஐவர்; இரு சிறுவர்கள் மாயம்

Chithra / Apr 17th 2025, 10:10 am
image

 

பாணந்துறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

பாணந்துறை மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று மாலை 5.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது ஐந்து பேர் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஐவரில் மூவரை அப்போது பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் குழுவினர் மீட்டுள்ளனர். 

பண்டாரகம அட்டலுகம பகுதியைச் சேர்ந்த மொஹமட் இர்பான் மொஹமட் முஹமட் மற்றும் யாசிர் அரபாத் அகமது ஆகிய சிறுவர்களும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாகவும்,

மற்றையவர் காப்பாற்ற முயன்றதாகவும் துரதிர்ஷ்டவசமாக இருவரும் காணாமல் போயுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுவர்களது உடல்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.


பாணந்துறை கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஐவர்; இரு சிறுவர்கள் மாயம்  பாணந்துறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். பாணந்துறை மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று மாலை 5.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது ஐந்து பேர் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்.ஐவரில் மூவரை அப்போது பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் குழுவினர் மீட்டுள்ளனர். பண்டாரகம அட்டலுகம பகுதியைச் சேர்ந்த மொஹமட் இர்பான் மொஹமட் முஹமட் மற்றும் யாசிர் அரபாத் அகமது ஆகிய சிறுவர்களும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாகவும்,மற்றையவர் காப்பாற்ற முயன்றதாகவும் துரதிர்ஷ்டவசமாக இருவரும் காணாமல் போயுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.கடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுவர்களது உடல்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement