• Nov 14 2024

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தாயகத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகள்...!

Sharmi / Jul 29th 2024, 3:14 pm
image

கனடா  புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் விளையாட்டுப் போட்டி கடந்த 10 ஆம் திகதி புங்குடுதீவில் இடம்பெற்றது. 

வர்த்தகரும்  சமூக சேவையாளரும்  சங்கத்தின் நடப்பாண்டு தலைவருமான குணராசா உதயராசா  தலைமையி்ல் இடம்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் தீவக மட்ட  ஆண், பெண் இருபாலாருக்குமான துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி, மரதன் ஓட்டப்போட்டி, உள்ளூர் விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன. 

உள்ளூர் விளையாட்டுகளில் சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல் போட்டி, குறுந்தூர ஓட்டப் போட்டி, சங்கீதக் கதிரை, ஆண்கள்,பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி  உள்ளிட்ட பல போட்டிகளும் நடைபெற்றன. 

குறித்த போட்டிகளில் சிறுவர் முதல் பெரியோர்கள் வரை ஆர்வத்துடன் பங்குபற்றித் தமது திறமைகளை வெளிக்காட்டியருந்தனர். 

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த  நிதி அனுசரனையாளர்களின் இரண்டு மில்லியன் ரூபா செலவில் நிர்வாக உறுப்பினர்களின் பங்களிப்புடன் குறித்த விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன. 

அதேவேளை குறித்த போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தாயகத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகள். கனடா  புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் விளையாட்டுப் போட்டி கடந்த 10 ஆம் திகதி புங்குடுதீவில் இடம்பெற்றது. வர்த்தகரும்  சமூக சேவையாளரும்  சங்கத்தின் நடப்பாண்டு தலைவருமான குணராசா உதயராசா  தலைமையி்ல் இடம்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் தீவக மட்ட  ஆண், பெண் இருபாலாருக்குமான துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி, மரதன் ஓட்டப்போட்டி, உள்ளூர் விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன. உள்ளூர் விளையாட்டுகளில் சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல் போட்டி, குறுந்தூர ஓட்டப் போட்டி, சங்கீதக் கதிரை, ஆண்கள்,பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி  உள்ளிட்ட பல போட்டிகளும் நடைபெற்றன. குறித்த போட்டிகளில் சிறுவர் முதல் பெரியோர்கள் வரை ஆர்வத்துடன் பங்குபற்றித் தமது திறமைகளை வெளிக்காட்டியருந்தனர். கனடாவில் வசிக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த  நிதி அனுசரனையாளர்களின் இரண்டு மில்லியன் ரூபா செலவில் நிர்வாக உறுப்பினர்களின் பங்களிப்புடன் குறித்த விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன. அதேவேளை குறித்த போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement