• Feb 16 2025

தமிழரசை வெல்ல வைக்க வேண்டும்- இளைய தலைமுறையினரிடம் சிறீதரன் பகிரங்கக் கோரிக்கை!

Tamil nila / Oct 20th 2024, 6:15 pm
image

"எமது இளைய தலைமுறையினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல வைக்க வேண்டும்."

- இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.


கிளிநொச்சி நகர வட்டார சமூகமட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்தே, இனத்துக்கே அடையாளம் தந்த 'தமிழ்த் தேசியத்தை' கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, அதே தளத்தில் நின்று பிறழாத பிரதிநிதிகளாக இதுவரை காலமும் முன்னெடுத்திருக்கின்றோம்.


தமிழ்த் தேசியம் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கான அடையாளம். அத்தகைய அடையாளத்தை நிரந்தரமாகப் பேணும் வகையிலான அரசியல் செல்நெறிகளின் மூலம், இனத்தின் இறைமையை மீட்கும் என் அரசியல் பணியும் பயணமும் தொடரும்.

எங்கள் அடையாளங்களை இழக்கத் துணியும் எந்த  மாற்றங்களுக்கும் எமது இளைய தலைமுறையினர் உட்பட்டுவிடக்கூடாது. எமது இளைய தலைமுறையினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை இந்தத் தேர்தலில் வெல்ல வைக்க வேண்டும்." - என்றார்.

சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்த்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழரசை வெல்ல வைக்க வேண்டும்- இளைய தலைமுறையினரிடம் சிறீதரன் பகிரங்கக் கோரிக்கை "எமது இளைய தலைமுறையினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல வைக்க வேண்டும்."- இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.கிளிநொச்சி நகர வட்டார சமூகமட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்தே, இனத்துக்கே அடையாளம் தந்த 'தமிழ்த் தேசியத்தை' கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, அதே தளத்தில் நின்று பிறழாத பிரதிநிதிகளாக இதுவரை காலமும் முன்னெடுத்திருக்கின்றோம்.தமிழ்த் தேசியம் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கான அடையாளம். அத்தகைய அடையாளத்தை நிரந்தரமாகப் பேணும் வகையிலான அரசியல் செல்நெறிகளின் மூலம், இனத்தின் இறைமையை மீட்கும் என் அரசியல் பணியும் பயணமும் தொடரும்.எங்கள் அடையாளங்களை இழக்கத் துணியும் எந்த  மாற்றங்களுக்கும் எமது இளைய தலைமுறையினர் உட்பட்டுவிடக்கூடாது. எமது இளைய தலைமுறையினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை இந்தத் தேர்தலில் வெல்ல வைக்க வேண்டும்." - என்றார்.சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்த்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement