• Nov 26 2024

நாடாளுமன்றில் சிறப்பாக செயற்பட்ட தமிழ் எம்.பிக்களில் சிறீதரன் முன்னிலை

Chithra / Sep 27th 2024, 3:19 pm
image

  

நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட எம்பிக்களின் தரவரிசை வெளியீட்டில், முதல் 15 இடத்திற்குள் ஒரு தமிழ் எம்.பியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2020 தொடக்கம் 2024 வரையான கடந்த நாடாளுமன்றில், 52 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களில், முதலாவது தமிழ் எம்பியாக சிறீதரன் தெரிவுசெய்ப்பட்டுள்ளார்.

சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 10,057 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும், 2015 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை (72,058) பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

தொடர்ந்து 2020 பொது தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றிருந்தார்.

நாடாளுமன்றில் சிறப்பாக செயற்பட்ட தமிழ் எம்.பிக்களில் சிறீதரன் முன்னிலை   நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட எம்பிக்களின் தரவரிசை வெளியீட்டில், முதல் 15 இடத்திற்குள் ஒரு தமிழ் எம்.பியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.2020 தொடக்கம் 2024 வரையான கடந்த நாடாளுமன்றில், 52 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.இவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களில், முதலாவது தமிழ் எம்பியாக சிறீதரன் தெரிவுசெய்ப்பட்டுள்ளார்.சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 10,057 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.மேலும், 2015 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை (72,058) பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.தொடர்ந்து 2020 பொது தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement