ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்டுகளால் இலங்கை 'ஏ' அணி இன்று (13) அபார வெற்றி பெற்றுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பில் ஹசன் இஷாகில் 46 ஓட்டங்களையும், பஹிர் ஷா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக குணசேகர திறம்படச் செயற்பட்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வெற்றிக்காக 246 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது மழையினால் ஆட்டத்திற்குத் தடை ஏற்பட்டது.
இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணியின் வெற்றி இலக்கு 41 ஓவர்களில் 231 ஓட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டது.
இந்த சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை 'ஏ' அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இலங்கை அணியின் வெற்றிக்குத் தூணாக விளங்கிய அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
ஆப்கானிஸ்தான் 'ஏ' அணியை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இமாலய வெற்றி ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்டுகளால் இலங்கை 'ஏ' அணி இன்று (13) அபார வெற்றி பெற்றுள்ளது.ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் ஹசன் இஷாகில் 46 ஓட்டங்களையும், பஹிர் ஷா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக குணசேகர திறம்படச் செயற்பட்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.வெற்றிக்காக 246 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது மழையினால் ஆட்டத்திற்குத் தடை ஏற்பட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணியின் வெற்றி இலக்கு 41 ஓவர்களில் 231 ஓட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டது.இந்த சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை 'ஏ' அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.இலங்கை அணியின் வெற்றிக்குத் தூணாக விளங்கிய அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.