• May 02 2025

இலங்கையில் டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

Chithra / Dec 6th 2023, 8:32 am
image

 

டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலைகள் வேகமாக குறைந்து வருவதாக, டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக நிர்மாணத்துறையில் புத்துயிர் ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஷமீந்திர குணசேகர தெரிவித்தார்.

டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதி மூன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. கொவிட் காரணமாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் கடந்த மாதம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது மற்றும் மீண்டும் இறக்குமதி செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்தது. 

கடந்த மாதத்தில் மீண்டும் இறக்குமதியை தொடங்கினோம். விலை வேகமாக குறைந்து வருகிறது. 

டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இது கட்டுமான துறைக்கும் நல்ல அறிகுறி.

இத்துறைக்கு மேலும் வரி விதிக்கப்பட்டால் டையில் ஒன்றின் விலை மீண்டும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஷமீந்திர குணசேகர அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.  டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலைகள் வேகமாக குறைந்து வருவதாக, டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்நிலைமை காரணமாக நிர்மாணத்துறையில் புத்துயிர் ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஷமீந்திர குணசேகர தெரிவித்தார்.டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதி மூன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. கொவிட் காரணமாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் கடந்த மாதம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது மற்றும் மீண்டும் இறக்குமதி செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்தது. கடந்த மாதத்தில் மீண்டும் இறக்குமதியை தொடங்கினோம். விலை வேகமாக குறைந்து வருகிறது. டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இது கட்டுமான துறைக்கும் நல்ல அறிகுறி.இத்துறைக்கு மேலும் வரி விதிக்கப்பட்டால் டையில் ஒன்றின் விலை மீண்டும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஷமீந்திர குணசேகர அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now